கிராம நிர்வாக அலுவலர் மீது இந்திய குடியரசு கட்சியின் பிரமுகர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் இந்த மனுவில் கூறியிருப்பதாவது இந்திய குடியரசு கட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக செயலாற்றி வருகின்றேன். நான் இந்து ஆதிதிராவிட வகுப்பை சோந்தவர். நான் கடந்த வாரம் என்னுடைய கட்சிக்காரருக்கு மாங்காடு
எல்லையில் வீட்டுமனை உள்ளது.
அதை பாக பிரிவினை செய்து பத்திர பதிவு செய்வதற்கு, மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன் அவர்களை நேரில் சந்தித்து அதன் சர்வே எண் என்னவென்று கேட்டேன், அதற்கு அவர் கொடுக்க மறுத்தார் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள் நான் இந்த ஏரியா கவுன்சிலர் என்று சொன்னேன். நீ எவனா இரு கொடுக்கமாட்டேன் என்று மிரட்டும் தொணியில் சொன்னார், நான் அதற்கு எல்லொரிடமும் இதை சொல்வீர்களா என்று கேட்டேன், இங்கு நான் சொல்வது தான் சட்டம், அதையெல்லாம் கேட்க நீ யார்? என்று சொல்லி வெளி போய்யா என்றும் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் எல்லாம் இப்படித் தான் என்று என் சாதியை இழிவுபடுத்தும் வகையில் ஒருமையில் பேசினார்.
இப்படி சாதிவெறி பிடித்த அதிகாரிகளாயிருந்து தமிழக அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்கிறார்கள். எனவே மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இந்த புகார் மனு மீது விசாரணை செய்து, அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்தால் தான் மற்ற அதிகாரிகள் நேர்மையாக நடந்துக் கொள்வார்கள் என்றும், தாழ்த்தப்பட்ட அனைவரையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக