கிருஷ்னகிரி அருகே 100 நாள் வேலை அட்டையில் சீல் வைத்த விவகாரம். ஏழை மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என கணக்கு காட்டாததால் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட மக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கிருஷ்னகிரி அருகே 100 நாள் வேலை அட்டையில் சீல் வைத்த விவகாரம். ஏழை மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என கணக்கு காட்டாததால் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட மக்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய கொண்டம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வந்த பல பெண்களுக்கு அவர்கள் வைத்திருந்த அட்டையில், திடீரென சீல் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு சிலருக்கு சீல் வைக்காத நிலையில் பெண்கள் இது குறித்து பணிதள பொறுப்பாளர்களிடம் வினவிய பொழுது சீல் வைக்கப்பட்ட நபர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சீல் வைத்ததாகவும், மற்றவர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் அல்லாதவர்கள் என பதில் தந்துள்ளார். 


இதை அடுத்து உண்மையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய பலருக்கு சீல் வைக்கப்படாமல் சொந்த நிலம் மற்றும் குடும்பத்தில் அரசு வேலைகள் இருப்பவர்கள் என வசதி படிப்பவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக சீல் வைத்ததால் கோபம் அடைந்த பெண்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கொண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் முற்றுகையிட்டுனர்.


இவர்களுக்கு பதில் அளிக்க ஊராட்சி மன்ற தலைவரோ, துணைத் தலைவரோ மற்றும் ஊராட்சி செயளரோ வராததால் அதிகநேரம் காத்துக் கிடந்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என சீல் வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆடு ,கோழி ,மாட்டு கொட்டகை,உறிஞ்சு குழாய், கழிவறை என பல திட்டங்கள் தங்களுக்கு வராமல் போகும் வண்ணம் இருப்பதாகவும், அரசால் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் தங்களுக்கு வராத எனவும் வசதி படைத்த நபர்களுக்கு சீல் வைத்துள்ளதால் அவர்களுக்கு மட்டுமே செல்லும் என்று ஆதங்கப்பட்ட பெண்கள், உடனடியாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கு பட்டியலை சரி செய்து சீரமைத்து உண்மையில் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும் என கூறி அங்கிருந்து கலந்து சென்றனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad