திருப்பத்தூர் அடுத்த கந்திலியில் உயிர் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த MLA. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அடுத்த கந்திலியில் உயிர் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த MLA.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், விஷமங்கலம் ஊராட்சியில் உயிர் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கொடி அசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் மாதத்திற்கு சுமாராக 140 சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் கர்ப்பிணி தாய்மார்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் உரிய நேரத்தில் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீறிய முயற்சி மற்றும் தொடர் கோரிக்கையினாலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த உயிர் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை விஷமங்கலம் ஊராட்சியில் துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் கேஎஸ்ஏ மோகன்ராஜ், திருமுருகன், ராஜா, சண்முகம், சீனிவாசன், ஹேமலதா வினோத்குமார், சந்திரசேகர், அழகிரி, சரவணன், பாஸ்கர், பாலு, உமாபதி, கருணாகரன், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad