திருப்பூர் மாவட்ட மாண்மை சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் ஆணைப்படி தாராபுரம் வட்ட சட்டை பணிகள் குழு சார்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அலைங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி இன் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி வரவேற்புரை ஆற்றினார். உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன் மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் விதத்தில் பேசினார், போதை பழக்கத்தினால் நம் மனமும் உடலும் பாதிப்பது மட்டுமில்லாமல் நம்மை சுற்றியுள்ள நபர்களுக்கும் குடும்பமும் பாதிக்கும் நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்க போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் முன் வர வேண்டும்.
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மற்றும் சார்பு நீதிபதியும் தர்ம பிரபு பேசுகையில் சட்டம் என்றால் என்ன அதன் விளக்கத்தையும் தற்போது போதை பழக்கத்தினால் சிறு வயதிலேயே உயிரிழப்பும் பெரும் குற்றமும் நடைபெறும்கிறது அதை தடுக்க இளைய சமுதாயம் முன் வர வேண்டும் போற்றோ சட்டத்தைப் பற்றியும் மாணவிகளுக்கும் எடுத்துரைத்தார்.
அலங்கியம் சட்டம் ஒழுங்கு காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய இளைய சமுதாயம் அழிந்து வருவது போதை பழக்கத்தினால் ஆகவே போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் என கூறினார் இறுதியாக அலங்கும் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் அழகர்சாமி மற்றும் முத்துராமன் ஆகியோர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக