நாகர்கோவில் நகரின் தண்ணீர் பிரச்சினை தீர்க்க, மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

நாகர்கோவில் நகரின் தண்ணீர் பிரச்சினை தீர்க்க, மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் இருந்து பைப்லைன் மூலமாக வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 


தற்போது தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதையடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 12.90 அடியாக உள்ளது. அணையில் உள்ள தண்ணீர் குட்டையில் தேங்கி கிடப்பது போல் குறைவாகவே காட்சியளிக்கிறது.  அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றதால் தண்ணீர் விநியோகம் செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை தற்போது சப்ளை செய்து வருகிறார்கள். ஆனால் போது மான அளவு தண்ணீர் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. தண்ணீர் பிரச்சினை தீர்க்க, மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad