புனித செபஸ்தியார் ஆலய இரவு சமபந்தி அன்னதானம்; 1200 ஆடுகள் 5000 கோழிகள் பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

புனித செபஸ்தியார் ஆலய இரவு சமபந்தி அன்னதானம்; 1200 ஆடுகள் 5000 கோழிகள் பலி.

 


திண்டுக்கல்லில் 350 ஆண்டுகள் பழமையான முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் நடைபெற்று அதன்பின் இன்றிறவு முதல் விடிய விடிய சமபந்தி அன்னதானம் நடைபெற உள்ளது.


ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சங்கங்கள் சார்பாகவும் குடும்பங்கள் சார்பாகவும் பக்தர்கள் சார்பாகவும் தங்களது வேண்டுதல்களாக, புனிதருக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு சமபந்தி அன்னதான விழா நடைபெறும். இதில் 1200 ஆடுகள்,5000 கோழிகள் திருவிழாவில் பலியிடப்படுகிறது. திண்டுக்கல் முத்தழகு பட்டியில் இரவு அசைவ அன்னதானத்திற்கு சமையல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/