16 வயதினிலே திருமணம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்; MP செல்லக்குமார் பெயரில் திருமணம் பத்திரிகை அச்சடித்த அதிர்ச்சி?? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

16 வயதினிலே திருமணம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்; MP செல்லக்குமார் பெயரில் திருமணம் பத்திரிகை அச்சடித்த அதிர்ச்சி??

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி இவர்களின் பெண் குழந்தை வயது 16 என்பவருக்கும் அதே ஊரில் வசித்து வரும் மாது சபரியம்மாள் அவர்களது மகன் நாகமணி என்பவருக்கும் நேற்று காலை 7:30 மணி அளவில் திருமணம் நடைபெற்றது.


குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் என்று இக்கால சூழ்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அச்சடித்த பத்திரிக்கை விநியோகம் செய்யப்பட்டு உற்றார் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து சிறார் மற்றும் பெண் குழந்தைகள் நல பாதுக்காப்பு அமைப்பினர் பெயரளவில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தரப்பு பெற்றோர்களிடமும் திருமணம் செய்யவில்லை என  எழுதி வாங்கியதாகவும், தாலி கட்டவில்லை எனக் கூறி வழி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் குழந்தை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அவர்கள் குறித்த திருமண வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad