தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (42) என்பவருக்கு சொந்தமான ஆடுகள் இன்று (01.08.2023) காலை அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்குவந்த மர்ம நபர்கள் ஒரு ஆட்டை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காயல்பட்டினம், ரத்னாபுரி பகுதியை சேர்ந்தவர்களான ராஜ் மகன் கார்த்திக்ராஜா (33) மற்றும் முத்தையா மகன் முத்துசாமி (34) ஆகியோர் மேற்படி சாந்த குமாரின் ஆட்டை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் மற்றும் போலீசார் எதிரிகளான கார்த்திக் ராஜா மற்றும் முத்துசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 10,000/- மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்தியாளர் Vn சரவணன்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக