தூத்துக்குடி பனிமய மாதாவின் தங்கத்தேரின் உயரம் 53 அடியா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி பனிமய மாதாவின் தங்கத்தேரின் உயரம் 53 அடியா?


தூத்துக்குடி, பனிமய மாதாவின் தங்கதேர் திருவிழா நாளை 05.08.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் திருத்தேர் பவனி வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என நேற்று மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 5ம் தேதி நாளை காலை 6மணி முதல் மாலை 4மணிவரை செயிண்ட் பீட்டர் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, பிராப்பர் தெரு, தெற்குராஜா தெரு, கிரகோப் தெரு, ஜி.சி.ரோடு, மாதா கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பில் தங்கத்தேரின் உயரம் 18 அடி என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் பனிமய மாதா தங்கத்தேரின் உயரம் 53 அடியாகும். மேரி மாதாவின் கையில் உள்ள ஜெப மாலையின் 53 மணிகளை குறிக்கும் வகையில் தேரின் உயரத்தை 53 அடியாக முன்னோர்கள் வடிவமைத்துள்ளார்கள். இதுதான் வரலாறு. 



இது  தெரியாமல் ஒரு மின் வாரிய பொறியாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது கூட பரவாயில்லை. இது ஒரு தனி நபர் பிழை என்று கூறிவிடலாம். ஆனால் அந்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள முன்னணி நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் தங்கத்தேரின் உயரம் 18அடி என்றே பிரசுரித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கையில் அய்யோ... பாவம்... என்று நினைக்கத் தோன்றுகிறது. என தூத்துக்குடி மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் தனது அதங்கத்தையும் உண்மையையும் தெரிவித்துள்ளார்.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad