7 வது ஹீரோ ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை 2023 ஹாக்கி விளையாட்டுப் போட்டி நேற்று (03.08.2023) சென்னை இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெறுவருவதையொட்டி இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திறந்தவெளி திரையில் (LED Screen) ஹாக்கி விளையாட்டுப் போட்டியினை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப.,பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் அமர்ந்து கண்டு களித்தனர்.
இந்நிகழ்வினில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் இராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக