அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பி சி பி சண்முகம் உத்தரவுபடி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன, அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரை மேற்கு காவல் துறையினர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறி அகற்றினர்.
இதனை எடுத்து அதிமுகவினர் கடும் கோபத்துக்குள்ளாகி இன்று நான்கு முணை சந்திப்பில் அதிமுக நகர செயலாளர் பசுபதி தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கோஷங்கள் காவல்துறையை கண்டித்து எழுப்பினர் அப்பொழுது அவரிடம் பேச்சுவார்த்தை செய்ய வந்த விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் அதிமுக நகர செயலாளர் பசுபதிக்கு பயங்கர தள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்பட்டது, இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டன பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக் கொள்ளுங்கள் என காவல்துறை கூறியது அடுத்து அதிமுகவினர் கலந்து சென்றனர்.
காவல்துறைக்கும் அதிமுகவில் இருக்கும் கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலையை காணப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக