திருமங்கலத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 3122 கிலோ வேப்பமுத்து ஏலத்திற்கு வந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

திருமங்கலத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 3122 கிலோ வேப்பமுத்து ஏலத்திற்கு வந்தது.

திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (04/08/2023) விருதுநகர் மாவட்டம் மெட்டுக்குண்டு கிராமம் மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த  இரு விவசாயிகளின் 3122 கிலோ வேப்பமுத்து  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 132 க்கும்‌ குறைந்தபட்ச விலையாக ரூ 50 க்கும்  ஏலம் போனது. இதன் மூலம் ரூ 410288 -க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 23989 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23.50 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 23 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 551767 க்கு வர்த்தகம் நடைபெற்றது.   


அடுத்ததாக உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 17980 கிலோ அக்சயா நெல்  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ 28.08 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 504918 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் சின்னபூலாம்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 6840 கிலோ செங்கட்டான் சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 49 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 335160 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  


மேலும் செங்கப்படையைச் கிராமத்தைச்  சேர்ந்த 20 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 40 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 800 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் எஸ்.பி.நத்தம் கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 40 கிலோ நாட்டு கொத்தமல்லி  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 80 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 3200 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் திருமங்கலத்தைச்   சேர்ந்த ஒரு விவசாயியின் 35.100 கிலோ மிளகாய் வற்றல் ஏலத்திற்கு வந்தது. 


அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 210 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 7371 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் தும்மநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் ஆகிய கிராமத்தைச்  சேர்ந்த இரு விவசாயிகளின் 543 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 115 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 110க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 59906 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 


மேலும் எஸ்.பி.நத்தம் கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 303 கிலோ இருங்கு சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 40 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 12138 க்கு வர்த்தகம் நடைபெற்றது.மேலும் செங்கப்படையைச் கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 495 கிலோ குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  50 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 24730 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  


ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ 1910278 க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad