வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழின் சிறப்பு குறித்து காணொளி ஒலிபரப்பப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாணவர்கள் சாதனையாளர்களாக மாற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் சித்த மருத்துவர் கு.சிவராமன் புதுமைப்பெண் திட்டம் குறித்தும், அவற்றின் பயன்கள், வழிமுறைகள் குறித்தும், சித்த மருத்துவத்தின் மகத்துவம், சர்க்கரை நோய், புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் அபிராமி கல்லூரியின் இயக்குனர் கே.ஜோதிராம் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் சிறப்பித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். சிறந்த வினாக்கள் கேட்ட மாணவர்களுக்கு கேள்வி நாயகன், நாயகி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பொறுப்பு அலுவலர் முனைவர் சம்பத் (GTM) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தமிழ் இணைய கல்வி கழகம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆரா அமுதன், துணை முதல்வர்கள் முனைவர் சக்திவேல், முனைவர் சுபாஷினி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். முடிவில் பேராசிரியை சுமதி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக