வேலூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

வேலூர் மாவட்டம் அடுத்த குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர் .


தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று 04.08.2023 வெள்ளிக்கிழமை மாலை குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD. விக்ரம்  தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் நவீன் பிரபு, ராகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். 


நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன்,  மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் வாசு, பாரத் நவீன் குமார், பேரணாம்பட்டு கிழக்கு வட்டார தலைவர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, ராகுல் விளையாட்டு அமைப்பின் மாநில தலைவர் ஆனந்தவேல் மற்றும் மனோகரன், புஷ்பாகரன், சத்தியமூர்த்தி, அரசகுமார், முருகேசன், அமீன்பாய், கந்தன், ஜெயவேலு, மலர்வண்ணன், குணசேகரன் பொன்னரசு, சிகாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad