இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப தலைமையில்  மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


குற்ற தடுப்பு மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு போன்ற அனைத்து பணிகளிலும் சிறப்பாக பணியாற்ற  ஆற்காடு தாலுக்கா வட்ட காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, கலவை வட்ட காவல் ஆய்வாளர் காண்டீபன், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர்கள் வாலாஜா காவல் நிலையம் மகாராஜன், வாலாஜா காவல் நிலையம் தினேஷ்,  அரக்கோணம் நகர காவல் நிலையம்  ரகு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆற்காடு நகர காவல் நிலையம்  லோகநாதன், சுப்பிரமணி இராணிப்பேட்டை காவல் சுப்பிரமணி, நெமிலி காவல் மதிவாணன் சதாசிவம் நெமிலி காவல்  ஜான்சி, அயல் பணி அரக்கோணம் நகர காவல் நிலையம் தலைமை காவலர்கள் மாறன், அரக்கோணம் நகர காவல் நிலையம்அப்துல் முஜீர், அரக்கோணம் நகர காவல் நிலையம் மீனா, இராணிப்பேட்டை காவல் நிலையம் ஜானகி தேவி, ஆற்காடு தாலுக்கா காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள்  கோபிகிருஷ்ணா, இராணிப்பேட்டை காவல் நிலையம் வெங்கடேசன்,  அரக்கோணம் நகர காவல் நிலையம் காவலர்கள் தாமோதரன், பானாவரம் காவல் நிலையம் அமித் பாஷா, அரக்கோணம் நகர காவல் நிலையம் திவாகர், ஆகியோர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


மேலும் இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா தலைமையிடம், அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்  யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, துணை காவல் கண்காணிப்பாளர்  இரவிச்சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு, துணைக் காவல் கண்காணிப்பாளர் இராஜா சுந்தர், மாவட்ட குற்ற ஆவண  காப்பகம், காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad