நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேற்று கால்பந்து விளையாட்டில் மாணவ மாணவிகள் ஆர்வாத்துடன் பங்கேற்று விளையாடினார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி ஸ்போர்ட்ஸ் அகாடமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இனைந்து வயலில் சேற்றில் கால்பந்து விளையாடுவதற்கான பயிற்சிகள் வழங்கினார்கள். இன்று காலை முதல் கல்லூரி வளாகத்தில் உள்ள வயல்வெளி சேற்றில் , கால்பந்து போட்டி நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இது போன்ற விளையாட்டுக்கள் மூலம் மாணவர்களையும் உடல் திறன் மேம்பட்டு., படிப்பிலும் ஆர்வம் காட்டுவார்கள் என என கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித் கஷாலி தெரிவித்தார். ஏற்பாடுகளை உடற்பயிற்சி இயக்குநர்கள் செரில் வர்கீஸ் மற்றும் ராதிகா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக