ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை ஏ. வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி. சிவரஞ்சனி, ஆசிரியைகள். கஸ்தூரி, அமுதா, தற்காலிக ஆசிரியைகள். ஹேமாவதி, ஜெயா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளி வளர்ச்சி நலனில் அக்கறை கொண்டு உள்ளவர்களை பற்றி கூறப்பட்டது. சிறந்த பள்ளி மேலாண்மை குழு தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி மையங்களில் கற்றல் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாணவர்களை நாள்தோறும் பள்ளிக்கு தவறாமல் அனுப்புமாறு பெற்றோர்களுக்கு கூறப்பட்டது. இடைநின்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை பற்றி இந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக