சிவகங்கை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வருகை புரிந்தார். அவருக்கு ,பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி என்ற முத்தையா தலைமையில், பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் அதிர்வெட்டிகள் முழங்க வரவேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் அருகே ஊத்துக்குளி, தென்கரை ஆகிய இடங்களில் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து அண்ணாமலை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, சோழவந்தான் நகரில் முக்கிய வீதி வழியாக சென்று சோழவந்தான் அய்யவார் பொட்டலில் அவருக்கு, பாஜக தொண்டர்கள் மீண்டும் வரவேற்பு கொடுத்தனர் .
பாஜக தலைவர் அண்ணாமலை சோழவந்தானுக்கு வருகை முன்னிட்டு சோழவந்தான் நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மீது பூமாரி பொழிந்தனர். ஏராளமான பெண்கள் பூவை தூவி அண்ணாமலை வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக