வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மணிப்பூரில் பழங்குடி பெண்களின் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய இந்திய குடியரசு கட்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மணிப்பூரில் பழங்குடி பெண்களின் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய இந்திய குடியரசு கட்சி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மணிப்பூரில் பழங்குடி இன பெண்களை நிர்வாண படுத்தியும் கூட்டு பாலியல் வன்புணர்வுகளை செய்தவர்களை கைது செய்யக்கோரி பழைய பஸ் நிலையத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 


வேலூர் மாவட்டத் தலைவர் இராசி.தலித் குமார் தலைமை தாங்கினார், வட்ட செயலாளர் ஏ தென்காந்தி வரவேற்புரை ஆற்றினார். அசோக்குமார் வினோத்குமார் என் குமரேசன் சாமு (எ) புஷ்பராஜ் சின்னப்ப தாஸ் மணிகண்டன் மகாவி யுவராஜ் பரிணாமன் பாண்டியம்மா பூர்ணிமா ஸ்டாலின் என்கிற ஜெயக்குமார் தமிழ்ச்செல்வி ராஜ்குமார் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில தலைவர் செகு.தமிழரசன் மத்திய அரசை கண்டித்து கண்டன உறை ஆற்றினார்.  இதில் மாநில பொது செயலாளர் மாங்கா பிள்ளை மாநில பொருளாளர் கௌரிசங்கர் ராஷ்டிரியா உலமா கவுன்சில் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேசிய செயலாளர் ஏ இஸ்மாயில் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராமஜெயம் முன்னாள் மாநில துணைத்தலைவர் பி ஏகாம்பரம் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் பி தன்ராஜ் மாநில துணை செயலாளர் இர்ஷாத் அலி பி ஆர் ஏ விழிப்புணர்வு மன்ற தலைவர் குயிக் ராஜா மாநில தொழிற்சங்க பொருளாளர் எஸ் மலையாராஜன் மாநில செயலாளர் என் ஷமிழ் அகமத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இறுதியில் மாவட்ட பொருளாளர் எஸ் வெங்கடேசன் நன்றி கூறினார்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad