நாகர்கோவில் கேத்ரின்பூத் மருத்துவமனை அருகில் 18வயது நிரம்பாத மூன்று சிறுவர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் அந்த சிறுவர்களுக்கு உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது,மூன்று பேர் பயணம் செய்தது ஆகிய விதிமீறல்களுக்கு 6000 ருபாய் அபராதமும் உரிமம் இல்லாத சிறுவர்களை வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தைக்கு 5000 ரூபாய் அபராதத்தோடு மொத்தம் 11000 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதித்த 10 இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய வயது இன்றி, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு 5000 ருபாய் அபராதம் விதிப்பதோடு அவர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதித்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பெற்றோர்களுக்கும் 5000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக