திருப்பூர் அருகே ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

திருப்பூர் அருகே ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி.

ஒரே நாளில் நான்கு லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்று  வருவாய் ஈட்டிய விவசாயி இனிமேலாவது விவசாயிகளுக்கு பெண் கொடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த ஜோதியம்பட்டி சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ் 27 வயதான இவர் தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறார். விலை ஏற்ற இறக்கம் உள்ள நிலையில் இந்த ஆண்டுதான் தனக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 900 கிலோ தக்காளி அறுவடை செய்து கொண்டு வந்துள்ளதாகவும் 260 பெட்டிகளில் 15 கிலோ வீதம் கொண்டு வந்த நிலையில் பெட்டி 1550 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வருவாயை ஒரே நாளில் நீட்டினார் விவசாயியான தங்களாலும் வருமானம் ஈட்ட முடியும் எனவும் இந்த ஆண்டு தனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக உள்ளதாகவும் இனிமேலாவது விவசாயியை நம்பி பெண் கொடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad