திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கனாம்பாளையம் ஊராட்சியில் 1) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்(MGNREGS)கீழ் கூடப்பட்டு வள்ளுவர் காலனி சுடுகாட்டிற்கு போகும் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு சுமார் 22.62 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுபாலம் அமைத்திடவும், 2) MGSMT திட்டத்தின் கீழ் காக்கணாம்பாளையம் முதல் வள்ளுவர் காலனி சாலை வரை சுமார் 11.90 லட்சம் மதிப்பீட்டில் (0/0-0/620m) 620m தூரம் கொண்ட சாலை அமைத்திடவும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி MLA பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, கலைவாணி செல்வராஜ், ஒன்றிய அவைத்தலைவர் சின்னத்தம்பி, மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், சிவலிங்கம், பூபதி மேகநாதன், குப்பன், செல்வம், ஞானவேல், முத்து, குபேந்திரன், திருநாவுக்கரசு, கண்ணன், சாம்ராஜ், அண்ணாமலை, காளிதாஸ், குணசேகரன், அருள், சிலம்பரசு, ஜீவா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக