தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.08.2023) நடைபெற்றது.
மத்திய மற்றும் மாநில அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள், ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியம் தொடர்பாகவும் மற்றும் பழைய மனுக்களின் நிலை குறித்தும எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சுதந்திரபோராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் தியாகிகள் ஓய்வூதியம் பெறுபவர்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அரசுவேலை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி சிந்து, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி சாந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.நாராயணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக