கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர். ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர். ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர். ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டை சங்கத்தினர் 3 நாள் பயணமாக மலேசியா செல்கின்றனர். கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இண்டஸ்ட்ரியல், பிளாஸ்டிக், சித்தா, பேப்பர், என்ஜினியரிங் ஆகிய 5 தொழில்துறை சார்பில் தொழில்களை பெருக்கு வதற்காகவும், தொழில் முன்னேற்றம் அடைவ தற்காகவும் மலேசிய தூதரகம் வர்த்தக பிரிவு வான் அகமத் தர்மேஷ் இடிஸ் ஏற்பாட்டில் 15 பேர் கொண்ட குழு இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல உள்ளனர். 


இதுகுறித்து கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-  கப்பலூர் தொழிலதிபர் சங்கத்தின் சார்பாக 15 பேர் கொண்ட குழு மலேசியா வர்த்தகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நாளை செல்கிறோம். கப்பலூர் தொழிற்பேட்டை அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இதனை கருதுகிறோம். மலேசியா பயணம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. 


மலேசியாவில் உள்ள வர்த்தகத்துடன் 25 பேர் கொண்ட குழு சேர்ந்து நாங்களும் வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோம். மலேசியாவில் உற்பத்தி யாகும் பொருட்களை கோலாலம்பூரில் மலேசிய அரசு கண்காட்சி வைத்துள் ளது. அதனை பார்வையிட செல்கிறோம். மலேசியா பயணம் கப்பலூர் தொழில் பேட்டையை விரிவுபடுத்த உபயோகப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad