நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் 50,000 வழங்க கோரி உள்ளிட்ட 6-அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொழிலாளர்கள் கண்கள், வாய்களில் கருப்புத் துணி கட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கார் மேலா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் 50,000 சம்பளம் வழங்க கோரியும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளிகள் கடந்த 26ஆம் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று 16 வது நாளாக நெய்வேலி டவுன்ஷிப் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் தொழிலாளர்கள் கண்களில் வாய்களில் கருப்பு துணி கட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக