கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினருக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினருக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் அமைதி வழி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.


இதனை ஆதரிக்கும் விதமாக தேசிய முற்போக்கு திராவிட இயக்கத்தின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார் மேலும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.


- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad