விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், கல்லுப்பட்டியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், கல்லுப்பட்டியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா

கல்லுப்பட்டியில், கலையரங்கம் திறப்பு: அமைச்சர்.



விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், கல்லுப்பட்டியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார்.   ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழகநிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்து    வைத்தார்.   


நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர்  ராஜேந்திரன், பேரூராட்சி த் தலைவர் செந்தில் , மாவட்டக்கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.


விருதுநகர் அருகே காரியாபட்டியில்,
கற்றலில் இனிமை துவக்கப்  பள்ளியில் , தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை, காரியாபட்டி பேரூராட்சி தலைவர்  செந்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக கட்சி பிரமுகர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad