எல்எப்சி அரசு நிதி உதவி பெரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 84 ஆம் ஆண்டு விளையாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

எல்எப்சி அரசு நிதி உதவி பெரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 84 ஆம் ஆண்டு விளையாட்டு விழா.


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை எல்எப்சி அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 84 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது  இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருட் சகோதரி  மேரி குயீன்  தலைமை தாங்கினார் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரிக்கு கிளாரா ஜெசின்தாராணி முன்னிலை வகித்தார் ராணிப்பேட்டை   மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.செந்தில்குமார், சென்னையிலிருந்து வருகை தந்த சார்லஸ் பொரோமியோ  மாநிலத் தலைவி அருட்சகோதரி எ.அமலி அன்பரசி,  திருமலை கெமிக்கல் கம்பெனியின் தலைவர் சீனிவாச ராகவன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

மாணவிகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.செந்தில்குமார் தொடங்கி வைத்தார், யோகா,மாவட்ட மாஸ் டிரில்,  ஓட்டப்பந்தயம், செஸ் போட்டி, கேரம் போர்டு, கூடைப்பந்து, டென்னிஸ் போட்டி, டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன, விளையாட்டில்  பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளை பிரின்ஸ் ஜெயக்குமார், பாலகிருஷ்ணன் இக்னேஷ்யர் சுரேஷ் குமார் ஆகியோர் நடுவர்களாக நின்று வெற்றி பெற்ற மாணவிகளை தேர்வு செய்து அறிவித்தனர்   வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டினர். 


இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பணியாற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியை பெருமக்கள், அலுவலக பணியாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள்,  முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் இன்னால் மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad