கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே வெள்ளூர் கிராமப் பகுதி வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் யோகேஸ்வரன் (9), சரவணன் மகன் சபரிவாசன்(10), ஆகிய இருவரும் மற்றும் சசிதரன் என்ற ஏழு வயது சிறுவனுடன் சேர்ந்து அப்பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஆற்றுத் தண்ணீரில் யோகேஸ்வரன், சபரி வாசன் இருவரும் இறங்கியுள்ளனர். தண்ணீரில் இறங்கிய இருவரும் எதிர்பாராமல் நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது கரையில் இருந்த சிறுவன் சசிதரன் நீண்ட நேரமாக அவர்கள் வெளியே வராததைக்கண்டு அழுது கொண்டு வீட்டிற்கு ஓடிவந்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு ஆற்று நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு அருகில் உள்ள வாண்டையார் இருப்பு அரசு துணை சுகாதாரநிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் அவர்களை குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குஅனுப்பி வைத்துள்ளனர்.அங்கும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களையும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெள்ளூர் கிராமத்தின் இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக