ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களின் சங்கம் உருவாக்கப்பட்டது, - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களின் சங்கம் உருவாக்கப்பட்டது,

திருப்பத்தூர் அருகே கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் இணைந்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் இணைந்து இன்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த சங்கத்தின் தலைவராக ஆதியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ பி பழனிவேல் மற்றும் துணை தலைவராக குனிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் இந்த சங்கம் உருவாக்கப்பட்டதின் முக்கிய காரணம் தலைவர்களுக்கும் ஊராட்சி மன்ற துணை தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக நிர்வாகம் செய்ய முடியாமல் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழலும் ஏற்படுவதால் அதனை சரி செய்யும் நோக்கில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும் கருத்து வேறுபாட்டின் காரணமாக எந்த பஞ்சாயத்தில் பொது மக்களுக்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதோ அந்த பஞ்சாயத்துக்கு சங்கம் சார்பில் நேரடியாக சென்று தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் துணை தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது இந்த சங்கத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad