இரண்டு ஆண்டு காலமாக பேரளவிற்கு செயல்படும் மின் பிரிவு அலுவலகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

இரண்டு ஆண்டு காலமாக பேரளவிற்கு செயல்படும் மின் பிரிவு அலுவலகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் புவனகிரி  வட்டம் பு.உடையூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு பிரிவு அலுவலகங்களில் உள்ள அதிகப்படியான மின் பகிர்மானங்களை பிரித்து பொது மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக புதிதாக பு.உடையூர் மின் பிரிவு அலுவலகம் துவங்கப்பட்டது. 


பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து துவங்கப்பட்ட இந்த பிரிவு அலுவலகம் இரண்டு ஆண்டுகளாக பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறதே தவிர பொது மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. தற்போது புவனகிரி பிரிவு அலுவலகங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, மருதூர், கொளக்குடி, பிரசன்னராமாபுரம், உளுத்தூர், தலைக்குளம், நத்தமேடு, குமுடிமூலை, ஜெயங்கொண்டம், எல்லைக்குடி ஆகிய பகிர்மானங்களில் உள்ள மின் இணைப்புகள் பு.உடையூர் பிரிவு அலுவலகத்தோடு இணைக்கப்பட வேண்டும். 


இரண்டு ஆண்டுகளாக இதற்கான எந்த முயற்சியையும் யாரும் எடுக்காத காரணத்தால், தமது ஊருக்கு அருகாமையில் உள்ள உடையூருக்கு செல்ல வேண்டிய மின் நுகர்வோர்கள் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் பயணித்து புவனகிரி செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக, பிரசன்னராமாபுரம், உளுத்தூர், தலைக்குளம், மருதூர், கொளக்குடி போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு பு.உடையூர் அருகாமையில் உள்ள ஊர் ஆகும். 


ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளாத காரணத்தால் இந்த பகுதி வாழ் மக்கள் தங்களது மின் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணித்து புவனகிரி அலுவலகம் செல்லவேண்டிய நிலை உள்ளது. பெயரளவில் இயங்கும் பு.உடையூர் பிரிவு அலுவலகம் முழு செயல்பாட்டுக்கு வரவேண்டும். சிரமம் குறைய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


- புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad