கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா வளையமாதேவி அருகே உள்ள அம்மன் குப்பம் ஊராட்சியில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது இந்த புதிய கட்டிடத்தை அம்மன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அப்பா ரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்த அங்கன்வாடி கட்டிடத்தில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது, இவ்விழாவில் அங்கன்வாடி மேலாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் MA.சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக