மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியினை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த விளக்கங்களையும் செயல்பாடுகளையும் ஆசிரியர்களுக்கு குழு செயல்பாடுகளாகவும் வழங்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு பாடத்திற்கு உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பயிற்ச்சியில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோவன், ஜெய்சங்கரி, ஜெயாந்த் , செந்தில் பாண்டி, துறைராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.
இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் அங்கயற்கன்னி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக