சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை வாட்டர் டேங்க் அருகில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளர் வேல்முருகன் புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை வாட்டர் டேங்க் அருகில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் முதல் நாள் சமைக்கப்பட்ட மீதி உள்ள நண்டு, சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் கெட்டுப்போன உணவு பொருட்களை அப்புறப்படுத்தி அளித்தனர்.
மேலும் பழைய உணவுப் பொருட்களை பதனிட பயன்படுத்திய குளிர்சாதன பெட்டி பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் கடை ஐந்து நாட்களுக்கு அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் சரிவர செய்யப்பட்டு ஆய்விற்குப் பின்னர் திறந்து கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக