திருப்பத்தூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நல்லிணக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று (18.08.2023) திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
'நான் சாதி, இன,வட்டார,மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன்" என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்து மாணிக்கம், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு ஆய்வாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக