திருப்பத்தூர் அரசு பூங்கா தெருவில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நாட்றம்பள்ளி திமுக ஒன்றிய செயலாளர் சூரியகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல், மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன் ஆகியோர் வருகின்ற 20.08.23ம் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் வாட்டாட்சியர் அலுவலகம் எதிரே நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக, இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதலை அளித்து அழைப்பு விடுத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக