திருப்பத்தூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சிறப்பு முகாம் மற்றும் நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சிறப்பு முகாம் மற்றும் நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு கௌதம் பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மாவட்ட திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைக்கு நேரில் சென்று அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad