திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளில் உள்ள பழைய தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல். இ. டி விளக்குகள் பொருத்தும் பணியை 14-வது வார்டில் இன்று நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் பூஜை செய்து துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, அரசு வழக்கறிஞர்கள். ராஜா, சரவணன், 28-வது வார்டு உறுப்பினர் பவானி ரமேஷ், 17-வது வார்டு உறுப்பினர். பிரேம்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
நகராட்சியில் உள்ள 27 உயர்மின் விளக்குகள், 4200 நவீன தெரு விளக்குகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் மாற்றப்பட்டு வருகிறது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக