திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பேரி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி தலைமையேற்று கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.
இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கே எஸ் ஏ மோகன்ராஜ், ஆர் தசரதன், ராஜா, சீனிவாசன், PTA தலைவர் ஜெகநாதன், SMC தலைவர் ஜெகதமா மற்றும் தெய்வகுமார், கோவலன், மாவட்ட ஆவின் பால் தலைவர் சின்ன பையன் கார்த்தி மற்றும் கோவிந்தராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக