கந்திலி ஒன்றியத்தில் இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் ஊழலா, தீர்மானம் நோட் இதுவரை காட்டவில்லை என கவுன்சிலர் கேள்வியால் மழுப்பல் பதில் சொன்ன சேர்மேன்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய சேர்மேனாக திருமதிமுருகன் என்பவர் இருந்து வருகிறார், இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைப்பெற்றது, இதில் திமுக, அதிமுக,பாஜக சுயேட்சை கவுன்சிலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராட்சி தோறும் 6லிருந்து 7 லட்சம் ரூபாய் வரை கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தனர், அப்போது பெரியகாரம் 6வது வார்டு அதிமுக கவுன்சிலர் பன்னீர்செல்வம் என்பவர் குறுக்கிட்டு கடந்த இரண்டு வருடங்களாக வழக்கமாக கூட்டம் நடைப்பெற்று வருகிறது.
இதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக கூறுகின்றனர், ஆனால் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான நோட் கூட்டத்தில் காட்டவில்லை என குற்றம் சாட்டினார், அப்போது சேர்மேன் திருமதி முருகன் பதில் சொல்ல முடியாமல் அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக தீர்மாணம் நோட் கொண்டுவரப்படும் என மழுப்பலாக பதில் கூறியதால் அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறி பெரிய அளவில் ஊழல் நடைப்பெற்றதா என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக