பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சுதந்திர தின விழா அறிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சுதந்திர தின விழா அறிக்கை.

நமது நாட்டின் 77 வது விடுதலை திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தியடிகள் தலைமையில் போராடிய தலைவர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள். போராடியவர்கள், சிறை சென்றவர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றுவோம்  வணங்குவோம்.


நமது நாடு வளர்ந்து வருகின்ற நாடு. வளர்ச்சி அடைய வேண்டிய நாடு. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னும் வளர்ச்சி அடைய வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது. கல்வி. அறிவியல். மருத்துவம். தொழில்நுட்பம் போன்ற பலவற்றில் வளர்ந்து வருகின்ற நிலையில் மேலும் அதிவேக வளர்ச்சி அடைய வேண்டிய தேவையும் உள்ளது. கல்வியில் எல்லோரும் படிக்கின்ற நிலை உருவானாலும் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் நிலை கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் மத்தியில் உருவாக வேண்டி உள்ளது. 


அனைவருக்கும் ஒரே தரமான சீரான கல்வி பெற நிலை உருவாக வேண்டும். படித்த இளைய தலை முறையினருக்கு வேலையில்லா திண்டாட்டம் நாள் தோறும் அதிகரித்து வருகின்றது. இது மிகப்பெரும் சவாலாகவே நீடிக்கிறது. மக்கள் தொகையில் 40% அளவுள்ள இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்தும் நிலை உருவாக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியதும், தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியதும் தலையாய தேவை.


ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியும் ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும் தான் நாட்டின் மேம்பாடு. கிராமப்புறங்கள் மேம்பாடு அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கும் வறுமையில் உள்ளவர்களுக்கும் சிறப்பு கவனம் தேவை. குடிசைகள் இல்லாத நிலையும், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் நிலையும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்கியும் வறுமை ஒழிப்பிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு       முன்னெச்சரிக்கையாக நிரந்த நீர் ஆதாரங்களை பெருக்கவும் பாசனத் திட்டங்களை மேம்படுத்துதற்கும் உரிய முன்னுரிமை வேண்டும். தற்போதைய பல்வேறு நிலைகளின் வளர்ச்சிக்கு இணையாக மனித குலத்தில் தீய பழக்கவழக்கஙகளும்தீய செயல்களும் வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றது. தீய சக்தியை அறவே ஒழித்து மனிதன் நெறியுடன் வாழ்வதற்கான நிலையை உருவாக்க அடிப்படை கல்வியில் மனித பண்புகளை மேம்படுத்தும் நிலை வேண்டும். 


உலகில் நமது நாட்டின் பண்பாடும் வாழ்வியல் நெறியும் உயர்ந்தது என போற்றப்பட்ட நிலை தற்போது குறைந்து வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளது. பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு நீதி போதனை. வாழ்வியல் நெறியை கற்பிக்கும் நிலை உருவாக வேண்டும். வன் முறையும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுவதையும். போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாவதையும் கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். நாட்டுப்பற்றும் சேவை நோக்கமும் சகோதர நல்லிணக்கமும் வளர்வ- -தற்கான ஆக்கப் பூர்வமான நடவடிக்கையை தேவை.அனைவருக்கும் தேவையான தரமான மருத்துவ வசதி கிடைத்திட, பெண்களுக்கு எதிரான நெருக்கடி- களிலிருந்து காத்திட, நலிந்து வரும் விவசாயிகளின் வாட்டத்தை அகற்றிட. உணவு உற்பத்தி பெருக்கிட. நெசவாளர்கள், மீனவர்கள் நலன் பேண. உழைத்து உருக்குலையும் தொழிலாளர்கள் உரிமை நிலைநாட்ட. மேம்பாட்டுக்கான தொழில் வளர்ச்சி அடைந்திட, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறிட உரிய சமூகநீதி கிடைத்திட, எல்லோரும் எல்லாமும் பெற்று வன்முறையும் தீவிரவாதமும் அகற்றி அமைதி நிலைநாட்டிட, சகோதர நல்லிணக்கமும் மனித நேயமும் நிலைத்திட வலிமையும் வளமும் ஓங்கிட ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு சுதந்திரத் திருநாளில் உறுதி ஏற்போம். அனைவரும் முழு சுதந்திரத்தையும் அனுபவித்து நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/