தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் விருது வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் விருது வழங்கும் விழா.

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர்  பெருமாள் கோவில் தெரு, தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 


விழா நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி, மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளின் தாளாளர், முதல்வர், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அவர்களது பணி திறமை, நிர்வாகத் திறமை, இருபால் மாணவர்களுக்கு அவர்களது பாடப்பிரிவில் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் இ.லாரன்ஸ், அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார். 


சிறப்புரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து  வழி நடத்துவது, சமுதாயத்தில் நல்ல மாணவர்களை  உருவாக்கி வைத்து  ஆண்டுதோறும் இறுதியில் பொது தேர்வில் முடிவை வைத்து விருதுகள் வழங்கி, கௌரவிக்கப்படுவது ஆசிரியர்களின் தனித்திறமையை வெளிக்கொணர பல வழிமுறைகளை அமைத்துக் கொடுப்பது, ஆசிரியர்களுக்கு பயிற்சி திட்டம் வழங்குவது, காப்பீடு திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களைக் கொண்டு வந்து பயனடைய செய்வது. இது போன்ற நோக்கத்தை இலக்காக வைத்து, அறக்கட்டளை செயல்படும் என்பதை சிறப்பு முறையில் நிறுவனர் கூறினார். 


விழாவில் அரியலூர் சுவாமி மெட்ரிகுலேஷன் ஸ்கூல், கீழப்பலூர் விநாயகா மகளிர் கல்லூரி, எம்.ஆர்.சி. ராஜா, ஸ்கூல் தத்தனூர் மீனாட்சி ராமசாமி சி.பி.எஸ்.சி. ஸ்கூல், ராம்கோ வித்யாலயா மந்திர் ஸ்கூல், தத்தனூர் மீனாட்சி மெட்ரிகுலேஷன் ஸ்கூல், மகிமைபுரம் மாடர்ன் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், விரத விகாஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், நிர்மலா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மற்றும் ஜெயங்கொண்டம் பார்த்திமா  மெட்ரிகுலேஷன் ஸ்கூல் போன்ற தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுமார் 150 நபருக்கு மேல் கலந்து கொண்டு  விழாவினை சிறப்பித்தார்கள். 


விழா நிகழ்ச்சியின் முன்னதாக திருமதி. கிரேஸ்ராணி, அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்துமணி, அவர்கள் நன்றி உரையாற்றி  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/