கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக நகர கழகம் சார்பில் மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாட்டுக்கு சென்று மாநாட்டை சிறப்பிப்பது குறித்து அதிமுக நகர நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுகசெயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் அறிவுறுத்தலின் பேரிலும் சேத்தியாத்தோப்பு நகர அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் ஏற்பாட்டின் பேரிலும் அவரது இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.
அவைத் தலைவர் கோழி.கோவிந்தசாமி தலைமையேற்றார். மாவட்டப் பிரதிநிதி தெய்வ.ராஜகுரு வரவேற்பு ரையாற்றினார். நகரப் பொருளாளர் ராமலிங்கம் தீர்மானங்களை வாசித்தார். நகர துணைச்செயலாளர் சம்பத் நன்றியுரையாற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி, நகர கவுன்சிலர்கள் லலிதா, டைலர் குணசேகரன், அஞ்சாபுலி, மதியழகன், லிங்குசாமி, சங்கர், ரவி, விஜயலட்சுமி இவர்களுடன் சர்புதீன், மாரியப்பன், அண்ணா பிரபாகரன், ஜபருல்லா, மூர்த்தி, மகேந்திரன், ராமமூர்த்தி, சுரேஷ், ஆதனூர் பாலு, விஸ்வநாதன், மணிமாறன் மற்றும் சில நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக