மானாமதுரை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் மீது வழக்கு பதிவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மானாமதுரை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் மீது வழக்கு பதிவு.

மானாமதுரை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் மீது வழக்கு பதிவு.



மானாமதுரை தாலுகா கீழமேல்குடியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் செல்வத்தின் மீது மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு சம்பந்தமாக மானாமதுரை நீதிமன்றத்தில் நான் தான் பினையதாரர் செல்வம் என்று கூறி நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆஜராகி உள்ளார். 



இந்நிலையில் நீதிமன்ற தலைமை எழுத்தர் ஆனந்தி இந்நபர் ஆள்மாறாட்டம் செய்துள்ளார் என்று மானாமதுரை நகர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ள நபரை விசாரணை மேற்கொள்வதற்காக காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad