சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
தேவகோட்டையில் ஹிரோஷிமா நாகசாகி தின ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. தேவகோட்டை நடையாளர் சங்கம் ,புளு டால்பின் பள்ளி மற்றும் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஹிரோஷிமா நாகசாகி தின ஓவியப்போட்டி தேவகோட்டை காந்தி ரோடு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார அளவில் பயிலும் மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அறிவியலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்தனர்.சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர் செந்தில்நாதன் , தேவகோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஹிரோஷிமா நாகசாகி தின ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் புத்தகங்களையும் வழங்கினர். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நடையாளர் சங்க உறுப்பினர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் , லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக