திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான சட்ட ஒழிப்புணர்வு முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான சட்ட ஒழிப்புணர்வு முகாம்!

பொதுமக்களுக்கான சட்ட ஒழிப்புணர்வு முகாம்! திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சேவ் அமைப்பு இணைந்து 30-8-2023 அன்று ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் காமாட்சியம்மன் மண்டபத்தில் நடத்தினர். நிகழ்ச்சியில் திருப்பூர் சேவ் தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர். பிரான்சிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்கறிஞர்கள் ஓ. உதயசூரியன், வழக்கறிஞர் சி. பால்பாண்டியன், வழக்கறிஞர் திருமதி பி. திங்களவள், வழக்கறிஞர் ஏ. நாகராஜன், வழக்கறிஞர் திருமதி ஏ. தமயந்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். அதில் குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் தாங்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்களின் குழந்தைகள் படிப்பு, திருமணம், மருத்துவம், போன்றவற்றின் பண பலன்களை பெறலாம் என தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்கள் இழப்பீடு சட்டம் பற்றியும் இழப்பீடு தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குடும்ப வன்முறையினால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் கருக்கலைப்பு, குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கு உள்ள அரசின் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் விளக்கினார்கள். மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். அது சார்ந்த கூடுதல் தகவல்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளை அணுகலாம் என தெரிவித்தனர். இறுதியில் குடும்ப வன்முறை சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பிரச்சினைகளை மனுவாக வழக்கறிஞர்களிடம் பொதுமக்கள் கொடுத்தனர். இறுதியில் சேவ் கள ஒருங்கிணைப்பாளர் ந. ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றினார் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான குடும்ப ஆலோசனைகள் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கேட்டு வழிமுறைகளை அறிந்து கொண்டனர் இந்த இலவச சட்ட ஆலோசனை முகாம் மூலம் தாங்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் பயன்பெற்றதாகவும் மக்கள் கூறினர்.
 

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad