கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து அனுமன்தீர்த்தத்தில் சிறப்பாக மக்கள் சேவையில் ஆரோக்கிய மருத்துவமனை இயங்கி வருகிறது அம் மருத்துவமனையில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை இன்று 11/08/23 வெள்ளிக்கிழமை காலை 12 மணி அளவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆர் திருநாவுக்கரசு சேர்மன் தலைமையில் நடைபெற்றது மேலும் உறுப்பினர் நல வாரியம் தமிழ்நாடு மருத்துவ வணிகர் சங்கம் முன்னிலை டாக்டர் கவின் எம்பிபிஎஸ் அவர் முன்னிலையில் ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் முக்கிய காரணமாக சுற்று வட்டார கிராம மக்களின் உடனடி சேவை வழங்குவதற்காக ஆரோக்கிய மருத்துவமனை உரிமையாளர் திரு பஷீர் மற்றும் எஸ் சரவணன் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக