சிவகங்கை மன்னர் துறைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் பவள விழா; அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மன்னர் துறைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் பவள விழா; அமைச்சர் பங்கேற்பு.

சிவகங்கையில் உள்ள மன்னர் துறைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் பவள விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 


இதில் சிவகங்கை சீமையின் இளைய மன்னர் அவர்கள் தலைமை தாங்கினார், சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஆஷா அஜித் அவர்களும், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அவர்களும் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி தலைவர்களும், ஒன்றிய ஊராட்சி தலைவர்களும், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர் பெருமக்கள், முன்னாள் இந்நாள் கல்லூரி மாணவர்கள், கழக உடன் பிறப்புக்கள், கழக நிர்வாகிகள், பத்திரிக்கை நண்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad