விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை செயலாளர் தமிழ் வளவன் என்கின்ற மோகன் கலந்து கொண்டார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும் தெருவில் பள்ளிப் பயலும் சாதி வெறி பிடித்த மாணவர்களால் அப்பாவி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி கொடூரமாக வெட்டப்பட்டதை பார்த்த அவர்களது தாத்தா அதிர்ச்சியில் உயிரிழந்தார் இது போன்ற சாதி வெறி கொண்ட மாணவர்களை கண்டித்தும் நிவாரணம் மற்றும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பர்கூர், காவேரிப்பட்டினம், மத்தூர், போச்சம்பள்ளி சாமல்பட்டி ஊத்தங்கரை அனுமன் தீர்த்தம் காரப்பட்டு,கல்லாவி சிங்காரப்பேட்டை ஆனந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி, திருமா முத்தமிழன், ஊடக மைய மாநில துணை செயலாளர் அம்பேத்கர், மாவட்டத் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனிராவ் தொகுதி துணை செயலாளர் பிரபாகரன், பிரேம் நகர செயலாளர் கோவேந்தன், துரைவளவன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், சதீஷ், மாதையன், திருமுருகன், சௌந்தர், நாவை, சங்கர், மாயக்கண்ணன், திருப்பதி,செந்தில், வீரமணி, ராமகிருஷ்ணன், கார்த்திக், தில் ஆர்ட்ஸ் தியாகு,வாழை, சுரேஷ்,திருநிலவன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார்,திருமா அறக்கட்டளை பா.குபேந்திரன் ஜெ.பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ். சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக