ஊத்தங்கரை தாண்டியப்பனூரில் மகாமுனிஸ்வரன் ஸ்ரீ சுவாமி தேர் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

ஊத்தங்கரை தாண்டியப்பனூரில் மகாமுனிஸ்வரன் ஸ்ரீ சுவாமி தேர் திருவிழா

தாண்டியப்பனூரில் மகாமுனிஸ்வரன் ஸ்ரீ சுவாமி தேர் திருவிழா
                                  

ஊத்தங்கரை, ஆக. 14–
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, தாண்டியப்பனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ மகா முனிஸ்வரன் சுவாமி கோவில் தேர் திருவிழா,நேற்று வெகு விமர்சையாக நடந்தது. அதிகாலை முதலே,ஸ்ரீ மகாமுனிஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் தாண்டியப்பனூர் ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுத்தனர். மேல, தாளங்கள் முழங்க திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் வேல்,கரகம் எடுத்து, ஆடு,கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு சேர்மன் உஷாராணி, டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, துணைத் தலைவர் கலைமகள் தீபக், அ.தி.மு.க., நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், வி.சி.க., மண்டல துணைச் செயலாளர் ஜிம்மோகன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் தர்மலிங்கம், கோபி, ஊர் நாட்டார் சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ். சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad